அஞ்சாகுங்கல்லடைப்பு எண்பதாகும்
அதிர்வாய்வு தொண்ணூறு திமிர்நோய் பத்து
மஞ்சாகும் விப்புருதி பதினெட்டுக்கும்
வளர்மேகம் இருபத்தோர் நீரோவைந்து
பஞ்சாகும் விஷபாகம் பதினாறுக்கும்
பகர்காதுநோய் பத்து விக்கல் பத்து
துஞ்சாகும் அரோசியங்கள் அஞ்சதாகும்
சொல் மூக்குநோய் பத்து உலகத்தாரே.
குத்தாருங்கடிதொஷம் ஐந்நூறுக்கும்
குறிகாயங்குத்துவெட்டு எழுநூறுக்கும்
பத்தாகுங்கிரந்தியுமே நற்பத்தெட்டு
பறக்கின்ற பொறிவிஷமோ எண்ணூறுக்கும்
முத்தாகும்நாள்கிட்டும் பிறநீர்க்கோர்வை
முதிரவே இருநூறு துடிநோய் நூறு
கொத்தாகும்பிள்ளைநோய் நூறதாகும்
கூறினேன் வியாதியுட விபரந்தானே.